Uncategorized

ஒரு சக்களத்திச் சண்டையும் பின்னே ஒரு குர்பானியும்..

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் என்னும் தியாகத் திருநாள். ஒவ்வொரும் ஆண்டும் ஒரு ஆடு/மாடு/ஒட்டகம் என எதையாவது ஒன்றைப் பலியிட்டு ஆப்ரஹாமின் தியாகத்தை நினைவு கொள்ளும் நாள். ஓ ! இஸ்லாம் பத்தி பேசுறோம்ல.. அப்ப இப்ராஹிம்-னு மாத்திக்கோ.. ஐசாக் என்பதற்கு பதிலாக இஸ்மாயில் என்று மாத்திக்கோ என்ற அசரீரி கேட்டதால்.. ஒவ்வொரு ஆண்டும் இப்ராஹிம் & இஸ்மாயீலின் தியாகத்தை நினைவு கொள்ளவே இந்தப் பண்டிகை.. ஹஜ் எனப்படும் புனிதப் பயணமும் இந்த நாளில்தான். எளிமையாகச்… Continue reading ஒரு சக்களத்திச் சண்டையும் பின்னே ஒரு குர்பானியும்..

Uncategorized

அல்வா கிண்டும் குர் ஆனும் , ஜாங்கிரி சுத்தும் இஸ்லாமும் !

/* திராவிட வாசிப்பு நவம்பர் அறிவியல் சிறப்பிதழுக்காக எழுதியது. */ பல நூற்றாண்டுகளாக கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் கணக்கற்ற கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டு வருகிறது அறிவியல். ஆதி காலத்தில் அந்த அறிவியல் புரிதல் இல்லாத போது மனிதர்களுக்குப் புரியாத பல புதிர்களுக்கு விடை காணும் முயற்சியாய் மனிதனால் கொண்டு வரப்பட்டதே மதங்கள். ஆனால் அந்த மதங்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஒரே பதிலையே கொடுத்தது. நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் ஏன் இங்கு… Continue reading அல்வா கிண்டும் குர் ஆனும் , ஜாங்கிரி சுத்தும் இஸ்லாமும் !

திராவிடம் · பெரியார்

தமிழ்த் தேசிய புளுகுணிகள் !

தமிழ்த் தேசிய புளுகுணிகள் ! திராவிடக் கலை, இலக்கியத்தின் மையப்புள்ளி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். “தொண்டு செய்து பழுத்த பழம்” என தந்தை பெரியாரை பாடியதோடு நில்லாமல் தந்தை பெரியாரின் உரைகளுக்கெல்லாம் கவிதை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என்ற நப்பாசையில் பல்வேறு இட்டுக் கதைகளைக் கட்டி பாரதிதாசனையும் தந்தை பெரியாரையும் எதிர் எதிராக நிற்கவைக்க முயலுகின்றனர் சிலர். பாரதிதாசனின் பாடல் வரிகளை அங்கங்கே உருவி எடுத்து அவை பெரியாருக்கு… Continue reading தமிழ்த் தேசிய புளுகுணிகள் !

அம்பேத்கர்

அம்பேத்கரும் காந்தியும்.

நியூ செர்சியில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் நடத்திய அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் “அம்பேத்கரும் காந்தியும்” என்ற தலைப்பில் நான் பேசியது. ********************************************************************************** அண்ணல் அம்பேத்கரின் 127-ஆவது பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட இந்தக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அமேரிக்கா குழும நண்பர்களுக்கும், கருத்தரங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கும், அரங்கிலுள்ள தோழர்கள் அனைவர்க்கும் வணக்கம் மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துக்கள் ! இன்று நான் பேச இருக்கும் தலைப்பு… Continue reading அம்பேத்கரும் காந்தியும்.

பெரியார்

அரவிந்தன் நீலகண்டனுக்கு மறுப்பு !

அரவிந்த நீலகண்டனுக்கு புரட்டை இட்டுக் கட்டி கட்டுரையாக எழுதுவது ஒன்றும் புதியதல்ல. முன்பு பெரியாரையும், அம்பேத்கரையும் இரு வேறு துருவங்களாக நிறுத்த முயன்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இப்போது திராவிட இயக்கங்கள் உங்களுக்குச் சொல்ல விரும்பாத 10 விசயங்கள் என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் வழக்கம் போல அங்கொன்று இங்கொன்றாய் அரைகுறை கருத்துக்களை மேற்கோள்காட்டி பித்தலாட்டப் பிரச்சாரம் பண்ணுவார் என்று பார்த்தால் ம.வெங்கடேசன் என்பவர் எழுதிய ’ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ என்ற புத்தகமாம் அதைக் கொண்டு… Continue reading அரவிந்தன் நீலகண்டனுக்கு மறுப்பு !

Uncategorized

சுயமரியாதை இயக்க வீராங்கனைகளும் முதல் இந்தி எதிர்ப்புப் போரும்.

சுயமரியாதை இயக்க வீராங்கனைகளும் முதல் இந்தி எதிர்ப்புப் போரும். – மகளிர் தினச் சிறப்புப் பதிவு ! 1938-ஆம் ஆண்டு இராஜகோபாலாச்சாரியாரால் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன? ஒருகை பார்க்க வேண்டியதுதான்” எனச் சூளுரைத்தார் தந்தை பெரியார். இளைஞர்களும், பெரியவர்களும் இந்தியை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர், சிறை சென்றனர். இதில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு நீதி மனறத்தில் நிறுத்தப்பட்ட போது அவர் எதிர் வழக்காட… Continue reading சுயமரியாதை இயக்க வீராங்கனைகளும் முதல் இந்தி எதிர்ப்புப் போரும்.

Uncategorized

பெரியார் நினைவு நாள் பதிவு !

தந்தை பெரியார் 24.12.1973 அன்று தனது 94 ஆம் வயதில் தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். அய்யாவின் இறுதி நிமிடங்கள்: மறுபடியும் காலை 7 மணிக்கு டாக்டர் இராமச்சந்திரா அவர்கள் மீண்டும் அய்யா அவர்களைப் பார்த்துச் சென்றார்கள். மதியம் இரண்டு மணிக்கு டாக்டர் சரத்சந்திரா, அய்யா அவர்களை வந்து பார்த்தார்கள். மூத்திரம் இறங்குவதில் சங்கடம் இருந்ததை அறிந்த டாக்டர்கள் இராமச்சந்திரா, சரத்சந்திரா ஆகியோர், உடனே அய்யா அவர்களை சென்னை பெரிய அரசு (G.H) மருத்துமனையில் சேர்த்தார்கள். தோழர்கள்… Continue reading பெரியார் நினைவு நாள் பதிவு !

Uncategorized

பெரியாரின் மீதான ராஜ துவேச வழக்கும் பி.ஏ.கி.யின் அவதூறும்.

இப்போதெலாம் பெரியார் எனப் பார்த்தாலே கண்ணை மூடிக் கொண்டு அடித்து விடுவதில் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு நிகர் அவரே ! இன்று ஒரு பதிவில் 1933 ஆம் ஆண்டு 9 மாதச் சிறைத் தண்டனை பெற்ற பெரியார் மன்னிப்புக் கடிதம் கொடுத்து 1934 மே மாதமே வெளிவந்துவிட்டார் என்கிறார். இது எதற்கு என்றால் சவர்க்கார் மன்னிப்புக் கடிதம் கொடுத்தது பற்றி விமர்சித்தது தவறாம். அவர் 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் இருந்தாராம். அதனால் சவர்காரை பெரிய ஆளுமையாகவும், பெரியாரை… Continue reading பெரியாரின் மீதான ராஜ துவேச வழக்கும் பி.ஏ.கி.யின் அவதூறும்.

Uncategorized

தமிழகம் கண்ட ஒப்பற்றத் தலைவர் – பெரியார் !

பி.ஏ.கிருஷ்ணனுக்கு அறிமுகமெல்லாம் தேவையில்லை. பெரியவர், அறிவு ஜீவி, முகநூலில் நாள் தோறும் கருத்துச் சொல்பவர். என்ன, யாரேனும் பத்து பேர் பெரியாரைப் புகழ்ந்து விட்டால் உடனே குறை கூறி ஒரு பதிவைப் போடுவார். அதற்கு மறுப்புரை கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் உங்களையே திட்டுவார், மேலும் பேசினால் பெரியாரிய மூடன்/கோமாளி/நாஜி போன்ற பட்டங்களைக் கொடுப்பவர். அவ்வப்போது பெரியாரைப் போன்று தமிழருக்காக உழைத்தவர் யாருமில்லை என்று சொல்லுவர்; ஆனாலும் கடவுள் மறுப்பு.இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு எனப்… Continue reading தமிழகம் கண்ட ஒப்பற்றத் தலைவர் – பெரியார் !

Uncategorized

பெரியார் என்னும் மொழிப் போராளி

பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டுமே நிறுத்தி விட வேண்டுமென ஒரு கூட்டம் கனவு கண்டு பலிக்காமல் போனது. இப்போது இன்னொரு கூட்டம் அவரை தமிழ் மொழியின் எதிரியாகக் காட்டவும், திறனாய்வு என்ற பெயரில் பொய்களைப் பரப்பிக் கொண்டும் உள்ளது. தக்க தரவுகளுடன் அதை மறுத்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அவதூறு பரப்புவது அவர்கள் குறிக்கோள். அதன் தொடர்ச்சியாக அவர்கள் திரும்பத் திரும்ப முன்வைப்பது இவற்றைத்தான். 1. பெரியார் தமிழை “காட்டுமிராண்டி மொழி” என்றார். 2. திருக்குறள்,… Continue reading பெரியார் என்னும் மொழிப் போராளி