அம்பேத்கர்

அம்பேத்கரும் காந்தியும்.

நியூ செர்சியில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் நடத்திய அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் “அம்பேத்கரும் காந்தியும்” என்ற தலைப்பில் நான் பேசியது.
**********************************************************************************

அண்ணல் அம்பேத்கரின் 127-ஆவது பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட இந்தக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அமேரிக்கா குழும நண்பர்களுக்கும், கருத்தரங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கும், அரங்கிலுள்ள தோழர்கள் அனைவர்க்கும் வணக்கம் மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துக்கள் !
இன்று நான் பேச இருக்கும் தலைப்பு Amebedkar & Gandhi ! நாம் அறிந்த வரலாறு சரியான ஒப்பு நோக்கு முறையைக் கொண்டிருக்கவில்லை. காந்தியை எல்லாத் தளங்களிலும் புனிதராகவும், மற்றவர்களை அவரோடு ஒப்பு வைக்க முடியாத உயரத்திலும் வைத்திருக்கிறது. அம்பேத்கரிடம் அது எந்த வித அனுதாபத்தையும் காட்டவில்லை. இந்திய விடுதலைப் போராட்டம் பற்றி பேசும் போது காந்தியாரை உயரத்தில் வைப்பது சரியே !. ஆனால் ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமைப் போராட்டம் பற்றிப் பேசும் போதும் அவரையே உயர்த்தி வைப்பதும், அவரையே ஒடுக்கப்பட்டவர்களுக்கான தலைவராகக் காட்டுவதும் எப்பிடிச் சரியாகும்? காந்தியே இதைத்தான் செய்தார். வட்ட மேசை மாநாட்டில் தானே ஒடுக்கப்பட்டவர்களுக்கான தலைவர் என்றார். இவர்கள் இருவரையும் இன்று மக்கள் மத்தியில் பேசப்படும் சில கருத்துக்களின் அடிப்படையில் ஒப்பிட்டு நோக்குவதே என் நோக்கம்.
ராம ராஜ்ஜியம்:
இன்று இந்துத்துவ அமைப்புகள் பேசும் இந்து ராஜ்ஜியம், ராம ராஜ்ஜியம் போன்றவற்றை முதன் முதலில் பரவலாக்கியவர்கள் பாரதியாரும், காந்தியாருமாகத்தான் இருப்பார்கள். ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா ‘ராம ராஜ்ஜியமாகத்தான்’ இருக்க வேண்டும் என்று விரும்பினார் காந்தி. அதற்கான எந்த விதமான definition-னும் கொடுக்க வில்லை. ராம ராஜ்ஜியம் என்பது இந்து ராஜ்ஜியமே என்றனர் சிலர்.
அம்பேத்கர் ஹிந்து ராஜ்ஜியம் என்பதை அடியோடு வெறுத்தார். If Hindu Raj does become a fact, it will, no doubt be the greatest calamity for this country. It is incompatible with democracy. Hindu raj must be prevented at any cost. உடனே காந்தியார் ராம ராஜ்ஜியம் என்பது ஹிந்து ராஜ்ஜியம் அல்ல ! என்றார்.
BY RAMARAJYA I do not mean Hindu Raj. I mean by Ramarajya Divine Raj, the Kingdom of God. அம்பேத்கர் ஹிந்து ராஜ்ஜியம் குடியாட்ச்சிக்குச் சற்றும் பொருந்தாது என்றார், காந்தியோ ராம ராஜ்ஜியமே உண்மையான குடியாட்சி என்றார்.
Whether Rama of my imagination ever lived or not on this earth, the ancient ideal of Ramarajya is undoubtedly one of true democracy in which the meanest citizen could be sure of swift justice without an elaborate and costly procedure. (YI, 19-9-1929). எனக்கு ராமன் ஆண்டாலும் சரி, ரஹீம் ஆண்டாலும் சரி, அது ராம ராஜ்ஜியமாகத்தான் இருக்க வேண்டும் என்றார் காந்தியார்.

இந்த swift justice என்ன என்பதை வால்மீகி காட்டுகிறார். ராமனின் ராஜ்ஜியத்தில் யாருக்கு இந்த நீதி கிடைத்தது என்பதையும் பார்ப்போம்.

இராவணனைக் கொன்று விட்டு அயோத்தி திரும்பிய ராமன் முடி சூட்டிக் கொண்டு ராம ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறான்.அப்போது ஒரு பிராமணன் அழுது கொண்டு வருகிறான்; இராமா, என்னுடைய பிள்ளை இறந்துபோனான், தந்தை இருக்க தமயன் இறப்பது என்பது மகா அதர்மம் – மகா கொடுமை. அது உன்னுடைய ஆட்சியிலே நடந்திருக்கிறது என்றால் என்ன பொருள்? உன்னுடைய ஆட்சி யிலும் அதர்மம் நடக்கிறது என்று பொருள். எங்கே அந்த அதர்மம் நடக்கிறது என்பதை கண்டுபிடித்து அதை உடனே களை என்று அந்த “பிராமணர்” புலம்பி அழுகிறார். உடனே இராமன் புறப்பட்டு சென்றான் எங்கே அதர்மம் நடக்கிறது என்று. அவன் கண் ணோட்டத்திலே வடக்கே போனான் காண முடியவில்லை; கிழக்கே போனான் காணமுடிய வில்லை; மேற்கே போனான் காணமுடியவில்லை; தெற்கேதான் ஒரு அதர்மத்தை கண்டான். என்ன அதர்மம் என்றால் சம்பூகன் என்பவன் தவம் செய்து கொண்டிருக்கிறான். தவம் என்றால் ஏதோ ஒரு நோக்கத்திற்கான ஒரு தீவிர பயிற்சி. அப்படிப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சம்பூகனைப் பார்த்து இராமபிரான் கேட்கிறான், ‘நீ எந்த வர்ணத்தவன்’ அவன் ஏதாவது பொய் சொல்லி தப்பித்திருக்கலாம், ஆனால் பளிச்சென்று சொல்கிறான், நான் தவம் செய்பவன் பொய் சொல்ல மாட்டேன், நான் நான்காம் வர்ணத்தவன் என்றான். சொன்ன உடனே மின்னல் போல (இது நான் சொல்லும் வாக்கியமல்ல, வால்மீகியே சொல்கிறான்) மின்னல் போன்று தன்னுடைய வாளை எடுத்து அவனுடைய தலையை வெட்டினான் சிறீ இராமன்.

அடுத்து வால்மீகி சொல்கிறார், சம்பூகன் என்ற சூத்திரனின் தலையை வெட்டியவுடன் தேவாதி தேவர்கள் எல்லாம் மகிழ்ந்தனர்; இராமன் மீது பூமாரி பொழிந்தார்கள். மேலிருந்து கீழே வந்து, இராமா அற்புதமான காரியம் செய்து விட்டாய்; அதர்மத்தை ஒழித்துவிட்டாய்; உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார்கள். இராமன் மிகப் பவ்யமாக ஒரே ஒரு வரம் தான் கேட்டான். அந்த “பிராமணன்” அழுதானே அவன் பிள்ளை மீண்டும் பிறந்து வரவேண்டும் என்றான். அதற்கு தேவாதி தேவர்கள் என்ன தெரியுமா பதில் சொன்னார்கள், ‘கவலைப்படாதே, எப்போது நீ சம்பூகனைக் கொன்றாயோ அந்த கணத்திலேயே, அந்த பிராமணப் பிள்ளைக்கு உயிர் வந்துவிட்டது. சூத்திரர்களுடைய வாழ்வு செத்தால்தான் பிராமணர்கள் வாழமுடியும் என்பது தான் இராமாயணக் கால நீதியாக இருந்தது. இந்த இராமராஜ்யம் மீண்டும் வரவேண்டுமென்று சிலர் பேசுவது எவ்வளவு கொடுமை.
இதுதான் ராம ராஜ்ஜியம் ; ராம ராஜ்ஜியத்தில் நீதி வழங்கப்பட்ட முறை.

தன்னுடைய Riddles of Rama & Krishna என்ற நூலில் அண்ணல் அம்பேத்கர் ராமனையும், ராம ராஜ்ஜியத்தையும் ஆய்வுக்குள்ளாக்குகிறார். அதில் வால்மீகி ராமாயணத்தைக் கொண்டே இராமனின் நடத்தையின் அவலத்தை விளக்குகிறார். வால்மீகி ராமாயணத்தை எழுதும் முன்பே யாரைப் பற்றி எழுதுவது என நாரதனைக் கேட்கிறார்.

“Tell me Oh! Narada, who is the most accomplished man on earth at the present time?”
and then goes on to elaborate what he means by accomplished man. He defines his accomplished man as:
” Powerful, one who knows the secret of religion, one who knows gratitude, truthful, one who is ready to sacrifice his self interest even when in distress to fulfil a religious vow.

அம்பேத்கர் அவர்கள் ராமன் நடந்த கொண்ட முறைகளைக் கொண்டு வாலி வதம், விபிஷணனுடன் சேர்ந்து ராவணனைக் கொன்றது, சீதையைச் சந்தேகித்து அவள் கற்பைக் கேள்விக்குள்ளாக்கி அவளை காட்டுக்கு அனுப்பியது என பல்வேறு நிகழ்வுகளைக் கூறி ராமன் ஒரு accomplished man என நிறுவுகிறார்.

I have got you as a prize in a war after conquering my enemy, your captor. I have recovered my honor and punished my enemy. People have witnessed my military prowess and I am glad my abours have been rewarded. I came here to kill Ravana and wash off the dishonor. I did not take this trouble for your sake.” Could there be anything crueler than this conduct of Rama towards Sita? He does not stop there.

He proceeded to tell her:

” I suspect your conduct. You must have been spoiled by Ravana. Your very sight is revolting to me. On you daughter of Janaka, I allow you to go anywhere you like. I have nothing to do with you. I conquered you back and I am content for that was my object. I cannot think that Ravana would have failed to enjoy a woman as beautiful as you are.”

சாதி & வர்ணாசிரமத்தின் மீதான இவர்கள் இருவரின் நிலைப்பாட்டைப் பார்க்க வேண்டும்.
1931-ல்தான் காந்தி, அம்பேத்கர் சந்திப்பு முதல் முறையாக நடந்தது. “காங்கிரஸ் கட்சியை ஏன் இவ்வளவு காட்டமாக விமர்சிக்கிறீர்கள்?” என்று அம்பேத்கரிடம் கேட்டார் காந்தி. அப்போதுதான் அம்பேத்கர்
“I have no Homeland, No Untouchable worth the name will be proud of this land.” என்றார்.

The unit of Hindu society is the caste. It’s neither individual nor the family. It is the caste என்பது அண்ணலின் கருத்து.

சாதி அமைப்பு முறையில் அவர் கொண்டிருந்த அடிப்படை நம்பிக்கையை மாற்றிக்கொள்ளாமல், “4,000 சாதிகளாக இல்லாமல் பழையபடி நான்கு வருணங்களாக சாதிகள் இணைந்துவிட வேண்டும்” என்றார் காந்தி.

Gandhi believed that Hindu society in its pristine state – during the Vedic times – was based on Varnashramadharma, or the law of varna.
According to Gandhi, this was society’s “predominant characteristic”.

“இந்த வர்ணாசிரமம்தான் சாதி முறையின் பிறப்பிடம்” என்கிறார் அம்பேத்கர்.

தன்னுடைய வாழ்நாளின் இறுதிப் பகுதியில், “சேர்ந்து சாப்பிடுவதையோ, சாதி மறுப்புத் திருமணங்களையோ நான் ஆட்சேபிக்கவில்லை” என்றார் காந்தி. (அவை வெறும் கருத்துகளே தவிர, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கைகள் அல்ல!) வர்ணாசிரமத்தில் தனக்கு நம்பிக்கை இருந்தாலும், வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்லாமல், அவரவர் மதிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றார்.

One important attribute of varna, writes Gandhi, is that while it is determined by birth, it can be retained only by observing its obligations. One who fails to do so loses his title to that varna.

இது எவ்வளவு அபத்தமானது என்று அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். “தங்களுக்கு வேறு தகுதிகள் இல்லாவிட்டாலும், பிறப்பின் அடிப்படையில் சாதிய படிநிலையில் மேலே இருப்பவர்களை அந்த இடத்தைவிட்டு இறங்குங்கள் என்று எப்படி உங்களால் வற்புறுத்த முடியும்?” என்று கேட்டார் அம்பேத்கர். “பிறப்பின் அடிப்படையில் கீழ்நிலையில் இருக்கும் ஒருவர், மற்ற தகுதிகள் காரணமாக உயர்நிலை அடைந்தால், அவருக்கு உரிய அங்கீகாரம் தருமாறு உங்களால் எப்படி நிர்ப்பந்தப்படுத்த முடியும்?” என்றும் கேட்டார். “பெண்களுடைய நிலை என்ன, அவர்களுடைய நிலையை மட்டும் வைத்து எடை போடப்படுமா அல்லது அவர்களுடைய கணவன்மார்களுடைய நிலையைப் பொருத்ததா?” என்றும் கேட்டார்.

கீதையில் கிருஷ்ணன் கூறுவது போல “சதுர் வர்ணம், மயா சிருஷ்டம்”
நான்கு வர்ணங்களையும் நானே படித்தேன்.. அது மட்டுமல்ல.. பின்னாலேயே இன்னொன்றும் சொல்லுகிறார். உனக்குத் திறமை இருந்தாலும், மேல்ஜாதி வேலையை, நீ செய்யாதே அடங்கி இரு! மோட்சம் உண்டு.  அதையே காந்தியும் சொல்கிறார்.

Varna means pre-determination of the choice of man’s profession. The law of varna is that a man shall follow the profession of his ancestors for earning his livelihood. Varna therefore is in a way the law of heredity.
“Why should my son not be a scavenger if I am one?” one born a scavenger must earn his livelihood by being a scavenger, and then do whatever else he likes.

இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு வர்ணமும் பல மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு போலத்தான். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குச் செல்வதற்கு என்று எந்தப் படிகளும் கிடையாது” என்றார். அதனாலேயே “ஓர் ஆதிக்கச்சாதியில் பிறப்பவன் கருவிலேயே நீதிபதி ஆகும் கனவைக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு தோட்டியின் மகனோ கருவில் இருக்கும்போதே தோட்டியாவதற்கான வாய்ப்பைத்தான் கொண்டிருக்கிறான்
இல்லாதவன் அவனுடைய உரிமையைக் கேட்டுப் பெறுவதைக் காந்தியம் தடைசெய்கிறது. ‘சொத்துக்கு ஆசைப்படாதே’ என்பதுதான் சூத்திரனுக்குக் காந்தி வழங்கும் உபதேசம். தோட்டிகள் தொடர்ந்து அதே தொழிலைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே காந்தி அந்தத் தொழிலுக்கு மகத்துவம் கற்பித்தார் என்று அம்பேத்கர் வாதாடுகிறார்.

தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுப்பதில் இவர்களின் நிலைப்பாடு என்ன என்பதைப் பார்ப்போம்.

இரட்டை வாக்குரிமை தலித்துகளுக்கு கிடைத்த ஓர் அரசியல் ஆயுதம் என்றார் அண்ணல் அம்பேத்கர். 1891ல் அயோத்திதாசரும், கேசவனும் தொடங்கிய திராவிட மகாஜன சபை ஒடுக்கப்பட்டோரின் பிரிதிநிதித்துவத்திற்காகத் தொடர்ந்து போராடியது.மிண்டோ மார்லி சீர்த்திருத்ததில் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ச்சியாக சைமன் கமிஷன் 1929ல் இந்தியாவிற்கு வந்தது. அக்கமிஷனில் இந்தியர் யாரும் இல்லை எனக் கூறி இந்திய தேசிய காங்கிரஸ் நிராகரித்தது. அதேவேளையில் இந்தியாவில் இருந்து சிறுபான்மைப் பிரிவினரும் தலித் அமைப்புக்களும் இக்கமிஷனை நிராகரிக்கவில்லை.

அதில் சாட்சியம் அளித்த அம்பேத்கர் வயது வந்தோர்க்கெல்லாம் வாக்குரிமை கொடுத்து பொதுத் தொகுதிகளில் ஒதுக்கப்பட்ட இடங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குக் கொடுக்கப்பட்டால் அது போதுமானது என்றார்.

வயது வந்தோர்க்கெல்லாம் வாக்குரிமை என்பது இல்லாவிட்டால் ? என்று கேட்ட போது அப்படியானால் நாங்கள் தனியான வாக்காளர் தொகுதிகளைக் கோருவோம்.  நமது பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம்தான் இருக்க வேண்டும். எவ்வித நிபந்தனையும் இன்றி நமது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்காகப் போராடுவோம் என்றார். 1930 நவம்பர் 12 அன்று பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாவது ஜார்ஜ் இந்திய வட்ட மேஜை மாநாட்டைத் துவங்கி வைத்தார். ‘இந்தியாவுக்கான புதிய அரசியல் சட்டம் நிர்ணயிக்கப்படும் முன்னர் இந்தியர்களின் பிரதி நிதிகள் ஒரு விவாதத்திற்கு அழைக்கப்படுவர்.

காங்கிரஸ் வழக்கம் போல சாக்கு சொல்லிவிட்டு கலந்து கொள்ளவில்லை !

அம்பேத்கர் அதில் கலந்து கொண்டு சைமன் கமிசனில் வைத்த அதே கோரிக்கைகளை முன் வைத்தார்.

அடுத்த ஆண்டு நடந்த இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் காந்தியும் காங்கிரசும் கலந்து கொண்டது. முதலாம் வட்டமேஜை மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தனித் தொகுதி கோரிக்கையை இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காந்தி பலமாக எதிர்த்தார். ) இவ்வட்டமேஜை மாநாட்டில் ஏற்பட்ட அம்பேத்கர்-காந்தி மோதல் மிகப்பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. காந்தியையும் காங்கிரசையும் இந்தியாவில் உள்ள தலித் அமைப்புகள் நிராகரித்தன. அம்பேத்கரையும், இரட்டைமலை சீனிவாசனையும் தலித் அமைப்புகள் தங்களது தலைவர்களாக அங்கீகரித்து தீர்மானங்கள் இயற்றின. அதே வேளையில் காந்திய ஆதரவுப் பத்திரிக்கைகள் அம்பேத்கரை தேசத் துரோகி எனச் சித்தரித்தது.
இறுதியில் பல போராட்டங்கள், வழக்கிற்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் தனித் தொகுதிகளை வழங்கியது.

காந்தி செப்.20ம் தேதி பகல் 12 மணிக்கு உண்ணாவிரதத்தை துவங்கினார். இவ் உண்ணாவிரதம் தலித் மக்களின் தனித்தொகுதி முறையை மட்டும் எதிர்த்தல்ல. தலித் மக்களுக்கு எந்த ஒரு இடஒதுக்கிட்டுத் தொகுதியையும் (கூட்டுவாக்களார்)அளிக்கக்கூடாது. அவர்கள் பொதுத்தொகுதியில் இருந்துதான் போட்டியிட வேண்டும் என்பது தான் காந்தியின் நிலைப்பாடு.

அம்பேத்கர் அன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். “என்னைப் பொருத்தவரை நான் எந்த யோசனையையும் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன். ஆயினும் தீண்டப்படாத மக்களின் உரிமைகள் எந்த வகையிலும் குறைக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன். தெளிவானதொரு திட்டமின்றி வெறுமனே கூடி மாநாடு நடத்துவதாலோ, விவாதிப்பதாலோ எத்தகைய பயனும் விளையாது… மகாத்மா அழிவே இல்லாத மனிதர் அல்லர். காங்கிரசும் அப்படித்தான். இந்தியாவில் பல மகாத்மாக்கள் இருக்கிறார்கள்… மகாத்மாக்கள் வந்தார்கள். மகாத்மாக்கள் மறைந்தார்கள். ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த இந்தியாவும் தேச நலன் / காந்தி நலனுக்கு எதிராக அம்பேத்கரை முன்னிறுத்தியது. அம்பேத்கரால் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அன்றைய இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் சுயமரியாதை இயக்கம் அம்பேத்கரை ஆதரித்தது.

திரு. காந்தி சரித்திர சம்பந்தமான காரணங்களால் முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் தனிப்பிரதிநிதித் துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறினார். இவ்வார்த்தையால் காந்தியின் மனப்பான்மை நன்றாக விளங்குகின்றது. முஸ்லிம்களும் சீக்கியர்களும் பரம் பரைப் பெருமையோடு ஆட்சி புரிந்தார்கள். ஆகை யால் அரசாங்க உரிமைகளுக்குப் பாத்திரமுடையவர் கள். . . என்ற கருத்தும் தீண்டாதார்களோ பரம்பரை யாகச் சுதந்திரமின்றி அடிமையாக வாழ்ந்தார்கள்; ஆகையால் அவர்களுக்குத் தனித்தொகுதிப் பாதுகாப்பு அவசியமில்லை என்ற கருத்தும் அடங்கி இருக்க வில்லையா?” (குடிஅரசு, 22.11.31, பக். 8 )

“”முஸ்லிம்களையும் சீக்கியர்களையும் அங்கீகரிக்கும்படி தம்மைக் கட்டாயப்படுத்தும் வரலாற்றுக் காரணங்கள் இருப்பதாக அவர் (காந்தி) வாதிடுகிறார். அந்தக் காரணங்கள் என்ன என்பதை அவர் விளக்கியதே இல்லை. முஸ்லிம்களும் சீக்கியர்களும் பழைய ஆளும் வர்க்கங்களின் மிச்ச சொச்சங்களாகக் கருதுகின்ற காரணங்களைத் தவிர அவை வேறு எதுவாகவும் இருக்கமுடியாது” காங்கிரசும் காந்தியும். . . பக். 307)

காந்தி, உண்ணாவிரம் மேற்கொண்டது இந்து சமூகம் உடைந்து போவதிலிருந்தும், பிளவுபடுவதிலிருந்தும் அதனை காப்பாற்று வதற்காகவே அன்றி,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலையை தேடித் தருவதற்காக அல்ல என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது என்றார் அம்பேத்கர்.

அதன்படியே புனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். இவ்ஒப்பந்தம் 24ம் தேதி கையெழுத்தானது. ஆனால் காந்தி உண்ணா விரதத்தை முடிக்கவில்லை. “…கவர்மெண்ட் அறிக்கை பூராவையும் தாம் படித்து பார்த்து பின்னர்தான் உபவாசத்தை நிறுத்த முடியுமென அவர் தெளிவாகக் கூறிவிட்டார்” அவ்வாறு படித்துப் பார்த்த பின்னர் உண்ணாவிரதம் 26ம் தேதி மாலை 5.30 மணியளவில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

1945ல் அம்பேத்கர் தன்னுடைய புத்தகத்தில் (What Congress and Gandhi have done for Untouchables) இந்த உடன்படிக்கையையும், காந்தியையும், காங்கிரஸையும், இந்த உண்ணாவிரதத்தையும் கடுமையாகச் சாடுகிறார். அந்த உண்ணாவிரதத்தில் எந்தப் புனிதமும் கிடையாது, அந்த உண்ணாவிரதம் தீண்டத்தகாதவர்களின் நன்மைக்காக இருக்கவில்லை. ஆதரவற்ற மக்களுக்கு ஆங்கில அரசாங்கத்தால் கிடைத்த சட்டரீதியான பாதுகாப்பை பறிக்க அவர் எடுத்துக் கொண்ட மோசமான வழிமுறை என்று விவரிக்கிறார். இதுதான் இன்றைய தலைமுறையினர் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு அடிப்படை. ஆனால் அதே அம்பேத்கர் 1954ல் BBCக்கு ஒரு பேட்டி அளிக்கின்றார்.

தாழ்த்தப்பட்டவர்களில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை அளித்தாலும் கூட, உயர்ந்த ஜாதி இந்துக்களின் ஓட்டர்கள் தொகையே அதிகமாக இருக்கும். இந்நிலையில் தாழ்த்தப்பட்டவர்களாலேயே பூர்வாங்க மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுத் தொகுதியில் நிறுத்தப்படும் நான்கு அபேட்சகர்களில் யார் உயர்ந்த ஜாதி இந்துக்களின் நம்பிக்கைக்குப் பாத்திர மாயிருக்கிறார்களோ அவர்கள் தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியும். முற்றும் தாழ்த்தப்பட்டார் உரிமைக்கு அஞ்சாமல் போராடும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படமுடியாது என்றார் பெரியார்.

ஏழைவீட்டு ஏந்தல் அம்பேத்கர் :

இந்தியாவின் விடுதலைப்போராட்ட காலத்தில் மிகமுக்கியமான தலைவர்கள் என்றொரு பட்டியலிட்டால் அதில் வரும் காந்தி,நேரு,படேல்,தாகூர்,அம்பேத்கர் இவர்கள் எல்லாரையும் கவனியுங்கள். காந்தியின் அப்பா திவானாக இருந்தவர்,நல்ல செல்வ வளம் மிகுந்த குடும்பம் அவருடையது.நேருவின் அப்பா மோதிலால் நேருவின் ஆடைகள் அவர் வக்கீல் தொழிலை விடும் வரை பாரீஸ் போய் வெளுக்கப்பட்டு வரும் என்பார்கள். தாகூரின் அப்பா இன்றைய வங்கதேசத்தின் பாதி நிலங்களுக்குச் சொந்தக்காரராக அன்றைக்கு இருந்தவர். படேலின் தந்தை பத்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். அம்பேத்கரின் தந்தையோ ஆங்கிலேய ராணுவத்தில் மிகக்குறைவான சம்பளத்துக்கு வேலை பார்த்தவர். அம்பேத்கர் அவர்கள் குடும்பத்துக்கு 13 வது பிள்ளை. வறுமைக்கும்,ஜாதிய கொடுமைகளுக்கும் நடுவில் போராடி அவர் அற்புதமான உச்சங்களைத் தொட்ட வகையில் தனித்த தலைவராகத் திகழ்கிறார்.

“பழம் பெருச்சாளிகள் சாத்தியமில்லாத விஷயங்களை மூடிய அறைக்குள் அரசுப்பணத்தில் அமர்ந்து பேசுகிற விடுமுறை தினம்தான் காந்தி ஜெயந்தி. ஆனால்,அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கையின் முக்கிய நாட்களின் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளத் தலித் மக்கள் தங்களின் சொந்தக்காசை செலவு செய்துகொண்டு நாடு முழுக்க அவரின் பிறப்பிடம் நோக்கி வருகிறார்கள். அந்த விழாக்கள் பிரம்மாண்டமானதாக,நாள் முழுக்க நடப்பதாக இருக்கின்றன ” நாமும் கொண்டாடுவோம். அண்ணலை உலகெங்கும் கொண்டு சேர்ப்போம். ஜெய் பீம். !

One thought on “அம்பேத்கரும் காந்தியும்.

Leave a comment