Uncategorized

உத்தம வில்லன் – 1

கம்பனின் இராமாயணமோ, புலவர் குழந்தையின் இராவண காவியமோ படிப்பதும், அதை முன்னெடுப்பதும் அவரவர் விருப்பம்.  கம்பனின் இரசிகப் பட்டாளத்தின் முன் புலவர் குழந்தை இரசிகர்களின் எண்ணிக்கை சொற்பமே ! இராவண காவியத்திற்கான எதிர்வினைகளில் மிக அதிகமாக நான் பார்த்ததும், அதிகம் பேசப்படுவதும் இதுவே, “இராமாயணத்தை தமிழர் மரபுப்படி மாற்றி எழுதியுள்ள கம்பன் இராவணனை மிகவும் உயர்வாகவும், வீரனாகவும் காட்டியுள்ளான். அதுவே போதும். தனியே ஒரு காவியம்/காப்பியம் தேவையில்லை”. இதைச் சரிப் பார்க்கவும், கம்பன் – புலவர் குழந்தை… Continue reading உத்தம வில்லன் – 1

Uncategorized

இராவண லீலா – ஒரு அறிமுகம்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் இராவண லீலா நடத்தப் போவதாக பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இணையத்தில் வலம் வரும் இளையத் தலைமுறையின் கவனத்திற்கு இது வராது ; வந்தாலும் இதன் பின்னிருக்கும் வரலாறு தெரியாது. அவர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அறிந்தவர்களுக்கு நினைவுபடுத்தவுமே இக்கட்டுரை. இராம் லீலா : ஆரியம் திராவிடத்தை வென்றதாக சித்தரிக்கப்பட்டதே இராமாயணம். இராமாயணத்தில் வரும் இராவணன், அரக்கர்கள் என அனைவருமே திராவிடர்களே என்பது பல அறிஞர்களின் கருத்து. இந்த வெற்றியை வருடா வருடம் கொண்டாடும் நோக்கிலே “தசரா”வின்… Continue reading இராவண லீலா – ஒரு அறிமுகம்

Uncategorized

திராவிட லெனின் – மாதவன் நாயர்

லாலா லஜ்பத்ராய் பற்றியெல்லாம் பள்ளி  வரலாற்றுப் பாடத்தில் படித்தோம். தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களைப் பற்றி எங்கேனும் படித்தோமா ? கர்ம வீரர் காமராசர் என்று தமிழ்ப் பாடத்தில் படித்துவிட்டு தமிழக அரசியல் வரலாறு படிக்காமல் விட்டு விட்டோம். நீதிக் கட்சியை ஆரம்பித்த மூவருள் (சி. நடேச முதலியார், சர். பிட்டி தியாகராயர், டி. எம். நாயர்) ஒருவரான மாதவன் நாயர் பற்றி அறிந்து கொள்ள  வேண்டிய  செய்திகள் ஏராளம். நீதிக் கட்சி / நாயர் என்றதும் சிலர்… Continue reading திராவிட லெனின் – மாதவன் நாயர்

Uncategorized

இட ஒதுக்கீடா ! ஆங்..செல்லாது ! செல்லாது !

இட ஒதுக்கீடு பற்றிய விவாதம் வரும்போதெல்லாம் 80 வருடமா இருக்கே..இன்னும் எதுக்கு.. இன்னும் எத்தனை வருடங்களுக்கு பழைய கதையைச் சொல்லியே இட ஒதுக்கீடு கேட்பீர்கள்-னு கும்பலாச் சேர்ந்து குரல் எழுப்புவாங்க. இட ஒதுக்கீடு என்றதும் அம்பேத்கார் கொண்டு வந்தார் என்ற புரிதலும், அட்டவணை & பழங்குடியினத்தவர்க்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற புரிதலுமே பெரும்பான்மையோரிடம் உள்ளது ! இரண்டு புரிதலுமே தவறு ! இட ஒதுக்கீடு வறுமை அழிப்புத் திட்டமும் இல்லை ;வேலை வாய்ப்பை உண்டாக்கித் தருகிறத் திட்டமும் இல்லை என்ற… Continue reading இட ஒதுக்கீடா ! ஆங்..செல்லாது ! செல்லாது !

Uncategorized

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம்

இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட(ர்)/(ம்) என்ற “சொல்” பலராலும் பல் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான புரிதலில், திராவிடத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்தான் என்றும் ‘திராவிடம் என்பதே போலியான ஒன்று’ என ஒரு கருத்தும் உண்டு. “திராவிடந்தான் எல்லாம் தந்தது” என்ற மிகைப்படுத்தப்பட்டப் புரிதலும் உண்டு. எது சரி என்பதை அவரவர் புரிதலுக்கு விட்டுவிட்டு பெரியார், அண்ணா, பாவாணர் போன்றோர் திராவிட(ர்)/(ம்)-த்தை எப்பிடிக் கையாண்டனர்?அவையெல்லாம் ஒன்றா? என்பதைப் பற்றியே இப்பதிவு ! இவர்களில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளக்… Continue reading பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம்