Uncategorized

அல்வா கிண்டும் குர் ஆனும் , ஜாங்கிரி சுத்தும் இஸ்லாமும் !

/* திராவிட வாசிப்பு நவம்பர் அறிவியல் சிறப்பிதழுக்காக எழுதியது. */

பல நூற்றாண்டுகளாக கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் கணக்கற்ற கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டு வருகிறது அறிவியல். ஆதி காலத்தில் அந்த அறிவியல் புரிதல் இல்லாத போது மனிதர்களுக்குப் புரியாத பல புதிர்களுக்கு விடை காணும் முயற்சியாய் மனிதனால் கொண்டு வரப்பட்டதே மதங்கள். ஆனால் அந்த மதங்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஒரே பதிலையே கொடுத்தது. நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என எதைக் கேட்டாலும் மதங்கள் அளிக்கும் ஒரே பதில், இது கடவுளால் செய்யப்பட்டது. கடவுள் இந்த உலகத்தையும், மனிதர்களையும் படைத்தார் என்ற எளிய பதில் அவர்களுக்கு புரிந்த கொள்ளக் கூடியதாகவும், போதுமானதாகவும் இருந்தது. மதங்களும், கடவுள்களும் ஆட்சி செய்யத் தொடங்கியது இப்பிடித்தான்.

மதத்தைப் பரப்பியவர்களும் இதை எழுதி வைத்துக் கொண்டு, கடவுளை கேள்வி கேட்காமல் பின்பற்றினால் இறப்புக்குப் பின் சொர்க்கமும், கேள்வி கேட்டால் நரகமும் கிடைக்கும் என இறப்பைக் காட்டி பயமுறுத்தினர். அந்த உளவியல் ரீதியான பயம் ஆதியிலிருந்து இன்றுவரை நன்றாகவே வேலை செய்கிறது. மனிதர்களுக்கு அறிவு பரந்து விரியத் தொடங்கிய போது அறிவியலும் புரியத் தொடங்கியது. கேள்வி கேட்கத் தொடங்கிய பகுத்தறிவாளர்களும், அறிவியல் அறிவியல் அறிஞர்களும் கடவுளுக்கு எதிராக சதி வேலை செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.

காலம் செல்ல செல்ல, கடவுள்கள் பூமியில் பிறப்பதும், கடவுளின் மகன்கள் பிறப்பதும், தூதர்கள் வருவதும் நின்றது. ஆனாலும் சமய அறிஞர்கள் என்ற பெயரில் புது புதுப் பொய்களை மக்களிடையே பரப்பி வருகின்றனர். அதிலும் சிலர் மருத்துவர்களாகவும், விண்வெளி ஆய்வாளர்களாகவும், அறிவியல் வல்லுனர்களாவும் மாறி அந்தப் பொய்க் கதைகளோடு அறிவியலை ஒப்பிட்டு தங்கள் மதத்தை அறிவியல் பூர்வமான மதமாக காட்ட முனைகின்றனர். தங்களின் மதப் புத்தகங்களில் பெரு வெடிப்பிலிருந்து நியூட்டனின் கோட்பாடு வரை எல்லாம் இருப்பதாக புரூடா விடுகிறார்கள்.

அனைத்து மதங்களும் இதைச் செய்கின்றனர். மற்ற மதங்களை போதுமான அளவில் துவைத்து காயப் போட்டிருப்பதால் இந்தத் தலைப்பில் எடுத்துக் கொண்டிருப்பது இஸ்லாம். இஸ்லாமின் புனித நூலான குர் ஆன்-ல் ஏதேனும் அறிவியல் உண்மைகள் இருக்கின்றவனா எனத் தேடித் தேடிப் பார்த்தால், கடல்லேயே இல்லையாம் என்றே பதில் வருகிறது. இதில் ஜாகீர் உசைனிகளும், பிஜே-களும் சுடும் வடைகளை விற்ற முடிந்தால் அம்பானியாவது நிச்சயம்.

இந்த அண்டவெளியின் தோற்றம் குறித்த ரகசியத்தை அறிவியல் நன்றாகவே விளக்கி விட்டது. மிச்சம் மீதம் இருந்த கேள்விகளுக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் பதிலளித்து விட்டார். இருந்தாலும் நம் மார்க்க அறிஞர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் குர் ஆன் சொல்வதுதான் உண்மை என மேடைதோறும் புளுகி மூட நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பெருவெடிப்பு எனும் நிகழ்விலிருந்து துவங்கியதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள், விண்கற்கள், எரிமீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள், பால்வீதிகள் என்று எண்ணிலடங்கா பொருட்கள் எண்ணிலடங்கா எண்ணிக்கையில் நிறைந்துள்ள இந்த பிரபஞ்சத்தின் மொத்த அளவு தற்போதைய அளவுகோல்களின் படி 2500 கோடி ஒளியாண்டுகள்.

இந்த அளவு இப்படியே இருக்குமா? அல்ல இன்னும் விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒரு ஒருமையிலிருந்து வெடித்துப்பரவியதில் தொடங்கியது, அதைத்தான் பெருவெடிப்பு கொள்கை என்கிறார்கள். இந்த பெரு வெடிப்புக்கொள்கை குரானில் கூறப்பட்டிருக்கிறது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இன்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் உருவான குரானில் இன்றைய அறிவியல் எப்படி இடம்பெற்றிருக்க முடியும்? எனவே குரான் இறைவனால் அருளப்பட்டது என்பது அவர்களின் வாதம்.
பிரபஞ்சம் குறித்து குரான் கூறுவதென்ன?

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” – ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. – (2:117)

அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது. – (3:47)

இந்த இரண்டு வசனத்தில் மட்டுமல்ல மீண்டும் மீண்டும் ( 3: 47, 3: 59, 6: 73, 16: 40, 19: 35, 36: 82, 40: 68) குறைந்த பட்சம் ஒன்பது இடங்களில் அல்லாஹ் ஆகுக என்று கூறினால் ஆகிவிடும் வருகிறது. அதாவது ஜீ பூம்பா என்று கூறுவதை போல் கூறினால் உலகம் படைக்கப்பட்டு விடும் என்கிறது குர் ஆன்.

ஆதியில் எந்த படைப்பும் இல்லாமல் அல்லாஹ் ம‌ட்டும் இருக்கும் போது அவ‌ன் எத‌னிட‌ம் “குன்(كُنْ‏) நீ ஆகுக” என்று கூறினான் என்பது மில்லியன் டாலர் கேள்வி . இதற்கு மார்க்க விஞ்ஞானிகள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். இந்த குன் என்ற சொல்லைச் சொல்வதற்கு அல்லாஹ் எடுத்துக் கொண்ட காலம் எவ்வளவு என்று பார்ப்போமா?

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை) படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையும், மரங்களை திங்கட்கிழமையும், துன்பத்தை செவ்வாய்க் கிழமையும், ஒளியை புதன்கிழமையிலும், படைத்தான். வியாழக்கிழமை உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான் என்று கூறினார்கள்.- (முஸ்லிம் 5379).

அதாவது மேற்கொண்ட ஹதீஸின் படி சனிக் கிழமை பூமியைப் படைத்த இறைவன், திங்களன்று தாவரங்களைப் படைத்து விட்டு மெதுவாக வந்து புதன் கிழமை ஒளியைப் படைத்தான் என்கிறது இந்த ஹதீஸ். இதை இறைத்தூதர் முகமது சொன்னதாக இருக்கிறது. ஒளி இல்லாமல் தாவரங்கள் எப்பிடி மூன்று நாட்கள் இருக்க முடியும் என்று கேட்டால் உங்களுக்கு நரகம் நிச்சயம்.

இதைச் சொன்ன பிறகு முகம்துக்கு அருள் வந்து வேறு ஒரு வசனம் இறங்கி இருக்கிறது. அது:

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? – (41:9).

திடீரென பூமி படைக்கப்பட இரண்டு நாட்கள் தேவைப்பட்டதாகச் சொல்லும் அதே குர்ஆன்தான் குன் என்று சொன்னதும் பூமி உருவாக்கி விட்டதாகவும் சொல்கிறது. குன் என்னும் ஒற்றைச் சொல்லைச் சொல்ல ஏன் இரண்டு நாட்கள் ஆனது என்று கேட்டால் அல்லாஹ் கடுப்பாகி உங்களை நரகத்தில் போட்டு எரித்து விடுவான் ஜாக்கிரதை.

அதையெல்லாம் விட்டு விடுவோம். பூமி தன்னைத் தானேச்சுற்றி வர ஆகும் நேரமே 1 நாள். பூமியே படைக்கப்படாத போது சனி, ஞாயிறு என்பதெல்லாம் எப்பிடி இருந்திருக்கும்?? ஆனால் எந்தக் கேள்வியையும் கேட்காமல் இதை நம்ப வேண்டுமே என்பதே மதங்கள் சொல்லும் “அறிவியல்” !! இது நம்பிக்கையா ? அல்லது மூட நம்பிக்கையா ?

பூமியைப் படைத்த்தோடு நிற்கவில்லை ஆண்டவன். வானங்களையும் (ஆம், பன்மைதான்) படைத்துள்ளான். அதுவும் 7 வானங்கள்.

ஏழு வானத்தை படைக்க அல்லாஹ்வுக்கு இரண்டு நாள் – (41:12)
வானங்களையும், பூமியையும்,ஆறு நாட்களில் படைத்தான். – (25:59)


வானம் என்பது ஒரு திடப் பொருள் என நினைத்துக் கொண்டிருந்த 7-ஆம் நூற்றாண்டு மக்களுக்கு இருந்த அறிவியல் தெளிவு இதில் புரிகிறது. நாம் பார்க்கும் நீல நிற வானம் என்பது திடப் பொருள் இல்லை; வெறுமனே மேகமும் அதன் பின்னே நீண்டிருக்கும் அண்ட வெளியுமே. அதில் அடுக்கடுக்காய் வானங்கள் என்பது வெற்றுக் கற்பனையே !

ஆனால் சும்மா விடுவார்களா நமது மார்க்க அறிஞர்கள் ?? !! ஆம், உலகம் பெரு வெடிப்பிலிருந்துதான் தோன்றியது. ஆனால் அந்த பெரு வெடிப்பு பற்றிய அறிவிப்பு எங்கள் குர்ஆனில் இருக்கிறது என்று ஜாங்கிரி சுத்தினார்கள்.

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? – (21:30)

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான் விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. – (41:11)


இந்த வசனங்களை வைத்துதான் குர்ஆன் பெரு வெடிப்பைப் பற்றிச் சொல்வதாக ஏமாற்றுகிறார்கள். வானமும் பூமியும் எப்பிடி இணைந்திருக்க முடியும்? நீங்கள் கடற்கரையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். நிறைய விளையாடிவிட்டு கடற்கரை மணலில் படுத்து சூரியன் மறைவதை ரசித்துக் கொண்டு இருக்கும் போது தொலைவில் கடலும் வானமும் ஒன்று சேர்வது போலத் தோன்றும். இதே காட்சிதான் பாலைவனத்தில் மல்லாந்து படுத்துக் கொண்டு பார்த்த முகமதுக்கும் தோன்றியிருக்கும். வானம் என்பதே பரந்த விரிந்த அண்டவெளி என்பதை அறியாத 7-ஆம் நூற்றாண்டில் வந்த கடவுளின் தூதருக்கு என்பது தெரியாத காரணத்தால் இந்த வசனத்தை கடவுள் அருளியதாக அள்ளி விட்டிருக்கிறார்.
இது வரை பார்த்தது வெறுமனே ட்ரைலர்தான் என்பது போல அடுத்தது அறிவியலை ஆங்காங்கே தெளித்துள்ளார் நமது தூதுவர்.

அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்.- (6:1).

சரி, வானமும், பூமியைக் கூட ஒத்துக் கொள்ளலாம். ஒளியை உண்டாக்கினான் என்பதைக் கூட விட்டுவிடலாம். இருள்?? எதுவுமே படைக்கப்படாத ஆதியில் இருளைத் தவிர என்ன இருக்க முடியும்? அதைப் படைத்தேன் என்றால் அதைப் படைக்கும் முன் இருந்தது என்ன?? எதுமே இல்லாத இருண்ட அண்டவெளியில் இருளை எப்படிப் படைக்க முடியும்? அசுரன் படத்தில் பசுபதி சொல்வது போல, குர்ஆனில் சொல்லியிருந்தா அதை உண்மைன்னு நம்பித்தான் ஆக வேண்டும்.
இந்த மதவாதிகளுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கும் உள்ள ஒரு பெரும் வேறுபாடு என்னவென்றால், மதம் தான் சொல்வதை எந்த வித தரவும் இல்லாமல் வெறுமனே நம்பிக்கையின் அடிப்படையில் ஒப்புக் கொள்ளவேண்டும் என்றும் அதை மாற்றவே கூடாது எனவும் அடம் பிடிக்கும். ஆனால் , அறிவியல் தெளிவு பெறப்பெற, தரவுகள் கிடைக்க கிடைக்க தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளும், திருத்திக் கொள்ளும். அதனால்தான் “விஞ்ஞானத்தின் முன் மதம் மண்டியிட வேண்டும். விஞ்ஞானம் ம‌த‌த்திற்குமுன் ஒருபோதும் மண்டியிடக்கூடாது.விஞ்ஞான‌ம் ஆதார‌ங்க‌ளின், தெளிவுக‌ளின், நிரூப‌ண‌ங்க‌ளின் அடிப்ப‌டையில் ஆன‌து.” என்கிறார் நமது ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள்.
கொஞ்சமாக கூர்ந்து கவனித்துப் பார்த்தால் மதம் செய்யும் பித்தலாட்டங்கள் தெரிந்துவிடும். இந்த உலகம் உருவாகி எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கும் என்பதை அறிவியல் சொல்வதற்கும், இஸ்லாம் சொல்வதற்கும் இருக்கும் வேறுபாட்டைப் பார்த்தால் எது உண்மை, எது மூட நம்பிக்கை என்பது புரியும். கிருத்துவம், இஸ்லாம் என அனைத்து ஆப்ரகாமிய மதங்கள் சொல்வது, இறைவன் உலகத்தைப் படைத்த பின் மனிதனைப் படைத்தான். அந்த முதல் மனிதனுக்கு “ஆதம்” என்று பெயர். ஆதமின் காலத்திலிருந்து இன்று வரை எத்தனை ஆண்டுகள் என்று பார்த்தால் நமக்கு இந்த உலகத்தின் வயது கிடைத்து விடும். சரிதானே ?

“நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்” என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஆதம் முதல் மனிதன் நூஹ் (நோவா) என்பது ஆதமின் பத்தாம் தலைமுறை வாரிசு என வைத்து கொண்டால்,

உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கையிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.” – (இப்னு கஸீர்)

என்ற இன்னொரு ஹதீஸையும் வைத்துக் கொண்டு ஆதாமுக்கும் , நோவாக்கும் இடையேயான ஆண்டுகள் பத்து நூற்றாண்டுகள் என அறிந்து கொள்ள முடியும். அதாவது ஆதம் தோன்றிய 1000 ஆண்டுகளுக்குப் பின்பு நோவா தோன்றியுள்ளார்.
இரண்டாவது நூஹ் நபி (நோவா) எவ்வளவு காலம் உயிருடன் இருந்தார் என்ற தகவல். குரானிலேயே இது இருக்கிறது. நூஹ் நபி வாழ்ந்த காலம் 950 ஆண்டுகள். ஆக அவர் இறக்கும் போது உலகம் தோன்றி 1950 ஆண்டுகள். அவ்வளவுதான்.
நூஹ் நபியிலிருந்து இன்றைக்கு வரைக்கும் எவ்வளவு காலம்? மூன்று நான்கு ஹதீஸ்கள் இருக்கின்றன. ஒன்று மோஸஸிலிருந்து இப்ராஹிம் (அப்ரஹாம்) வரைக்குமான காலத்தை சொல்வது. இன்னொன்று. ஈஸா நபிக்கும் தமக்குமான இடைவெளியைக் கூறுவது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் 4500 வருடங்கள் வருகிறது.

அதனைவிட முக்கியமாக நூஹ் நபியின் கப்பலே கிடைத்திருக்கிறது என்று நமது மார்க்க அறிஞர்கள் புல்லரிக்கும் அகழ்வாராய்ச்சியில் அந்த கப்பல் 4800 வருட பழையது என்று வேறு சொல்லிவிட்டார்கள். அந்த 4800 வருடங்கள் மிகச்சரியாக நூஹ் நபியின் காலத்தை சொல்கிறது. இதைக் கேட்டு கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.
இதை வைத்துப் பார்த்தால், 1900+4800 ~= 7000. கிட்டத்தட்ட 7000 ஆண்டுகள்தான் ஆகி இருக்கிறது இந்த உலகம் தோன்றி. இந்த 7000 ஆண்டுகளை வைத்துக் கொண்டுதான் பெரு வெடிப்புக் கொள்கையிலிருந்து , கருந்துளை வரை தரவுகளைக் கொட்டுகிறது இஸ்லாம். http://prophetsofallah.tripod.com என்ற தளத்துக்குச் சென்றால் ஆதம் முதல் முகமது வரையிலான காலக் கணக்கினைக் காணலாம்.

இஸ்லாம் அறிவியலுடன் ஒட்டிப் போகிறது என்ற வாதம் ,ஒரு அப்பட்டமான பொயென்பதற்கு குர்ஆன் வசனங்களே சாட்சி கூறும். அன்றைய ஏழாம் நூற்றாண்டில் உலவி வந்த கதைகளை வைத்தே குர் ஆனும் அறிவியல் என்று மறு ஒலிபரப்பு செய்கிறது. இதில் மூடநம்பிக்கைக்ளைத் தவிர எதுவுமில்லை.

ஆனால் அறிவியலோ, அண்டத்தின் தொடக்கத்தைத் தேடி காலத்தை பின்னோக்கி செலுத்தினால் இப்பிரபஞ்சம் முழுவதுமே ஒரு புள்ளியில் சுருங்கிவிடும் என்று யூகித்தனர். இதை ஒருமைநிலை (Singularity) என்றனர். ஏதோ காரணங்களால் இந்த ஒருமை விரிவடைந்து இப்பிரபஞ்சம் ஏற்பட்டது; அப்பொழுதிலிருந்து காலம், வெளி, பொருள் பிறந்திருக்கிறது; இதற்கு சுமார் 13700 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது தற்பொழுதைய அறிவியலின் கணிப்பு. குர்ஆனின் கணக்கோ 7000 ஆண்டுகள்.

“வானங்களும், பூமியும் இணைந்திருந்தன அவ்விரண்டையும் நாமே பிரித்தோம்” என்று பாறைக்கு வெடிவைத்துப் பிரித்ததைப் போன்று குர்ஆன் கூறுகிறது. பெரு வெடிப்பு பிரபஞ்சம் அமைய அடித்தளம் அமைத்தது. கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்களையும், நட்சத்திரங்களைச் சுழன்றுவரும் கிரகங்களையும் உருவாக்கியது. அதில் ஒரு அங்கமாக, அதனுள் இருக்கும் பூமி, எப்படிப் பிரிய முடியும்?

மூடுமந்திரமாக, திரித்து, மழுப்பி மறைக்கப்பட்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் உளறல்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. எதையாவது இட்டுக்கட்டி தங்களவர்களை தக்கவைத்துக் கொள்ள, அறிவியல் என்ற பெயரில் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர் என்பதைத் தவிர வேறில்லை. மதங்கள் மூட நம்பிக்கையை மட்டுமே பரப்பும் ஒரு போதும் அறிவியலோடு ஒத்து வராது. மதங்களை ஒதுக்கி விட்டு அறிவியலைப் பயில்வோம். மத நூல்களைத் தவிர்த்து அறிவியல் நூல்களைப் படிப்போம்.

6 thoughts on “அல்வா கிண்டும் குர் ஆனும் , ஜாங்கிரி சுத்தும் இஸ்லாமும் !

  1. Article is very informative, small correction: Earth takes one day to rotate itself and one year to round the sun. “பூமி சூரியனைச் சுற்றி வர ஆகும் நேரமே 1 நாள். பூமியே படைக்கப்படாத போது சனி, ஞாயிறு என்பதெல்லாம் எப்பிடி இருந்திருக்கும்??”

    Like

  2. 1. பூமியை படைத்தபின் ஆதாமை படைத்தோம் என்றால் உடனே ஆதாம் படைக்கப்பட்டார் என்று அர்த்தமோ? நீங்க சொன்ன கோடி ஆண்டுகள் கழித்து கூட ஆதாமை படைத்திருக்கலாம். இப்போ கணக்கு பாருங்க அந்த கணக்கு சரியாக வரும்.

    2. முதலில் ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். முஹம்மது ஸல் அவர்கள் அல்லாஹ் என்ன சொன்னனானோ அதைத்தவிர வேறு ஏதும் கூறவில்லை. முஹம்மது ஸல் அவர்களோ, குரான் ஓ அறிவியலோடு compare செய்து நம்புங்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் என்ன கூறினார்களோ அதை அப்படியே நம்ப வேண்டும். இப்பொழுதுள்ள மார்க்க அறிஞர் கள் அறிவியலோடு ஒப்பீடு செய்கிறார்கள் அது தவறு.
    அறிவியல் என்பது உங்கள் அறிவு சொல்வது. குரான் என்பது உங்களுக்கு அறிவை தந்தானே அவன் சொன்னது. நீங்கள் எதை பின்பற்றுவீர்கள்.
    3. அறிவியல்படி உலகம் பின்னோக்கி சென்றால் ஒரு புள்ளியில் ஆரம்பம் ஆகி இப்போது பெருகி விட்டது என்கிறீர்கள். இருக்கட்டும் யாரு பெருக்குனது…. என்று கேள்வி கேட்டால் அதுவா பெருக்கம் அடைந்தது என்கிறீர்கள். நாங்கள் அதுக்கு காரணம் இறைவன் என்கிறோம் இதில் எது அறிவியல்.
    இறைவன் இல்லை என்று சொல்வதை அறிவியல் என்கிறீர்கள். இறைவன் எப்படி பட்டவன் என்பதை சொல்வதுதான் அறிவியல் என்கிறது இஸ்லாம்.
    4. இருளும் ஒரு படைப்புதான். எல்லாவற்றையும் படைக்கும் முன்பு உலகம் இருளாகத்தான் இருந்திருக்கும் அதற்கு முன்னாடி இருள் இல்லாமல் இருந்திருக்கும். நம் மூளைக்கு சிந்திக்கும் ஆற்றல் அதற்குள் தான். இறைவேனே நன்கு அறிந்தவன்.
    5. இறைவன் நினைத்தால் ஆகுக என்று சொல்லி மொத்தமாக உருவாகியிருக்கலாம். இதை குரான் மூலம் இறைவன் வானவர்களுக்கு சொல்லவில்லை. மனிதர்களுக்கு சொல்கிறான் என்றால் இதில் மனிதனுக்கு வாழ்வியல் படிப்பினை இருக்கிறது. எந்த பொருளையும் உருவாக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது.
    6. மேலும் சகோ, எல்லாவற்றிக்கும் மேலாக நீங்கள் உண்மையான இஸ்லாமியராக இருந்தால் இந்த உலக வாழ்க்கையில் எந்த வழியிலும் வீணாகமாட்டீர். மரணத்திற்கு பின்பு உள்ள வாழ்க்கையிலும் வெற்றி நிச்சயம். இதில் எந்த மூட நம்பிக்கையும் அல்ல. ஆம் கடவுள் நம்பிக்கை மட்டுமே உள்ளது.

    பெரியார் கூட மூடநம்பிக்கை களை ஒழிக்கவே கடவுள் இல்லை என்று சொன்னார். அறிவியலை அறிந்து அல்ல.

    7. மேலும் நீங்க இப்படி கேளுங்கள்
    அல்லாஹ் தான் இறைவன் என்பதற்கு என்ன ஆதாரம்?

    முஹம்மது ஸல் அவர்கள்தான் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு என்ன ஆதாரம்?

    முஹம்மது ஸல் அவர்கள் தந்த குரான் தான் அல்லாஹ் தந்தது என்பதற்கு என்ன ஆதாரம்?

    இஸ்லாத்தில் அப்படி என்ன வாழ்வியல் முறை உள்ளது?

    இப்படி அறிவியல் பூர்வமான கேள்விகளையே நீங்கள் கேளுங்க பதில் தர கடமை பட்டுள்ளோம்.

    இஸ்லாத்தில் தான் அறிவியல் உள்ளது தவிர அறிவியலில் இஸ்லாம் இல்லை.

    மேலும் ஈமெயில் id ல தொடர்பு கொள்ளுங்கள்.

    Like

  3. Sahih mulsim 5739 la nee sonna antha hadith eh illaye.. solla pona sahih Muslim la total unrepeated hadith eh 2700 than micha ellame repeated narrations athulayum nee sonna hadith illa aana athu bible la ullathu….Adham(PBUH) oda age 1000 years nu oru hadith irukku 10 generations na epdi ji 1000 years oru generation ku new 1000 vacha kooda between Nuh(PBUH) and Adham(PBUH) there’s 10000 years approximately (Not from any authentic hadith I just derrived it from your own stand).allah used the word ayyam in the verse of surah sajdah while describing the creation of universe..the word ayyam means a set of time period i didn’t use my own status…the period between prophet Ishmael and Muhammed (PBUT) is called ayyam ul jahilliya(The period of ignorance).the year when rasulullah born is called ayyam ul feel(The year of elephant)…The menstruation period is also called ayyam…the 13 ,14,15 is also called ayyam…ayyam is a set of period it’s meaning varies according to the state of action.again allah isn’t a seperate god for Islam…the Arab speaking Christians call god allah…the Arabic bible which translated in 17th century also mention the FATHER as allah… because the word allah doesn’t have any gender…allah said his arsh is bigger than whole universe… it’s clear that the universe is bigger….in one verse allah tells the universe is spreading (Means virivadaithal) and even scientists accept that the universe is finite not infinite… it’s just a hypothesis for multiverse…I can give historical proofs in Islam…the pre islamic writing written by Walid bin mughira(Father of khalid Ibn Walid) mention god as allah…) Muhammed (PBUH) doesn’t invent allah…his father name is Abdullah he died 6months before the birth of muhummmed (PBUH)…yes I agree PJ is an screwed… Till the 19th century the scientist thought the universe is eternal and it is always there…even after the bigbang many atheist scientists criticized that because it justifies the creator who begin.. come on man work can be done in Symultaneously…apran Nuh nabi Dawah senja time period than 950 years…ithu than hadith kalai vallunarkaloda karuthu Qur’an la yengayum yentha prophet oda age uhme illa…ishtathukku adichu uttu blasphemy pannirukurathu nee than atha paathuko…and again before the creation of human the angels and djinns existed…it was clearly mentioned in Qur’an…ethuvume illatha pothu ethai solli padaikka nu nee soldra anga ethuvume illanu nee epdi soldra…again sciene cannot explain consciousness and science is constantly changing…if you use science as a scapegoat your own grandchild will thrash you because even Aristotle and ptholamy thought the earth is geo centric…from science you can get the idea of how things made but you can’t explain ‘why’ and ‘who’…if I made a cake and submitted before yourself without my presence (Revealing my selfy)you’ll get the cake and you can easily get the ingredients used in the cake by tasting and also make the similar cake but you can’t know me that I made the cake until I reveal my self before you….there are even many holes in your argument debunked by early scholars of islam

    Like

Leave a comment